Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல் முறையாக ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்த இந்தியா!

Advertiesment
முதல் முறையாக ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்த இந்தியா!
, புதன், 6 ஏப்ரல் 2022 (10:43 IST)
புச்சா நகரில் 400-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டது ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளது என இந்தியா கண்டனம். 

 
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 40 நாட்களாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் ராணுவமும் ரஷ்ய வீரர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
 
இதனைத்தொடர்ந்து உக்ரைன் தலைநகர் கீவ்-க்கு அருகே உள்ள புக்கா என்ற நகரத்தில் சாலையில் நூற்றுக்கணக்கான உடல்கள் சிதறிக்கிடந்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புச்சா நகரிலுள்ள ஒரு தெருவில் கைகள் கட்டப்பட்ட நிலையில் 20 ஆண்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன. 400 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்ட நிகழ்வு உலகம் முழுவதுமாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
இது ஒரு இனப்படுகொலை என்றும் இதை செய்தது ரஷ்யா தான் எனவும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி குற்றஞ்சாட்டினார். ஆனால் உக்ரைனின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது ரஷ்யா. இந்நிலையில் இது குறித்து இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளது. இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, 
 
உக்ரைனின் புச்சா நகரில் 400-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டது ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சுதந்திரமாக சர்வதேச விசாரணை தேவை என இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஒன்றரை மாதத்தில் முதல் முறையாக இந்தியாவும் ரஷ்யாவுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளது என்பது கூடுதல் தகவல். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புச்சா படுகொலை... ரஷ்யா திட்டவட்டமாக மறுப்பு!