Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

Siva
செவ்வாய், 20 மே 2025 (18:25 IST)
பாகிஸ்தானுடன் ஏற்பட்ட ராணுவ மோதல் மற்றும் அதன் விளைவான பதற்றங்களை தொடர்ந்து, இந்தியா தற்போது துருக்கி, அசர்பைஜான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளை எதிர்த்து பல கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது.
 
இவ்வேளையில், இந்திய அரசு ஒரு முக்கிய முஸ்லிம் நாட்டுடன் முக்கியமான ஒப்பந்தம் ஒன்றை செய்து உள்ளது. மாலத்தீவுகளுடன் 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
 
இவை, பயணக்கப்பல் சேவைகளை மேம்படுத்தல், கடல்சார் இணைப்புகளை விரிவாக்கம் செய்தல் மற்றும் உள்ளாட்சி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை உள்ளடக்கியவை. இதற்காக மாலத்தீவுக்கு ரூ.10 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்திய அரசின் மானிய உதவித் திட்டமான High Impact Community Development Project (HICDP) பாகம் 3ன் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களைப் பற்றியவையாகும்.
 
மாலத்தீவு வெளிநாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஒப்பந்தங்கள் மாலத்தீவு வெளிவிவகார அமைச்சகத்தில் கையெழுத்தாகி உள்ளதாகவும், இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் தொடர்ந்து வலுப்பெறுகின்றதற்கான மற்றொரு முக்கிய கட்டமாக இது இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
 
இந்த கட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட 13 திட்டங்களுக்கான மொத்த மானியத் தொகை   சுமார் 55 கோடி இந்திய ரூபாய் ஆகும்.
 
கடந்த ஆண்டு மாலத்தீவு பிரமுகர் ஒருவர் பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனம் செய்ததை தொடர்ந்து, இந்தியா–மாலத்தீவு உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன் பின்னர் இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை புறக்கணித்தனர். இதையடுத்து, மாலத்தீவுத் அரசு மன்னிப்பு கூறியதை தொடர்ந்து மீண்டும் இந்திய - மாலத்தீவு உறவு மேம்பட்டு வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments