Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கையில் புயலால் கடுமையான பாதிப்பு : இந்தியாவில் இருந்து நிவாரணப் பொருட்கள்

இலங்கையில் புயலால் கடுமையான பாதிப்பு : இந்தியாவில் இருந்து நிவாரணப் பொருட்கள்
, சனி, 21 மே 2016 (16:47 IST)
இலங்கையில் பெய்து வரும் கனமழையால், களனி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொழும்பு நகரின் வடகிழக்கு பகுதிகள் கடுமையான பாதித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

 


 
ரோனு என்று பெயரிடப்பட்டுள்ள புயலால் நிலச்சரிவு ஏற்பட்டத்தில் 63 பேர் உயிரிழப்பு, மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மீட்பு படையினர் பணியில் ஈடுப்படுவதில் சிக்கலாக இருக்கிறது என்று தேசிய பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களுடன் 2 கடற்படை கப்பல்கள் மற்றும் மீட்புக் குழுவினரை சி-17 விமானத்தில் அனுப்பியுள்ளது. 
 
இந்தியாவின் வெளியுறவு துறையின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
இந்திய கடற்படை சார்பில் ஐஎன்ஸ் சுனைனா மற்றும் ஐஎன்ஸ் சடலஜ் ஆகிய 2 கப்பல்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது, அதோடு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினரும், சி-17 ரக விமானமும் அனுப்பப்பட உள்ளது, என்றார்.
 
மேலும் விகாஸ் ஸ்வரூப், இலங்கை நமக்கு நெருக்கமான அண்டை நாடாகவும், நட்பு நாடாகவும் உள்ளது. அந்நாட்டுக்கு துன்பம் ஏற்படும் போது உதவுவதில் முதல் நாடாக இந்தியா எப்போதும் திகழ்கிறது, என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜயகாந்த்-காக உயிரையே மாய்த்துக் கொண்ட தொண்டன்