Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரபேல் ஊழல்: முன்னாள் பிரான்ஸ் அதிபர் கூறிய அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (20:01 IST)
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேரடியாக  குற்றம் சாட்டி வரும் நிலையில் இதுகுறித்து அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை முன்னாள் பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே கூறியுள்ளார்.

ரபேல் விமானத்தை இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் பிரான்ஸ் நாடு அனில் அம்பானியின் நிறுவனத்துடன் மட்டுமே இணைந்து செயல்பட வேண்டும் என்று இந்திய அரசு நிபந்தனை விதித்ததாகவும், அனில் அம்பானியை தவிர எங்களுக்கு இந்தியா வேறு வாய்ப்புகளை தரவில்லை என்றும் கூறியுள்ளார்.

 
ரபேல் விமான கொள்முதலில் மத்திய பா.ஜ.க அரசு அனில் அம்பானிக்கு சாதமாக செயல்படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறிய புகார் இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் பிரான்ஸ் அதிபரின் இந்த கருத்தை அடுத்து ரபேல் ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments