Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனி பாக். கதி அதோகதி... போரை தொடுத்த இந்தியா!!

Advertiesment
டெல்லி
, செவ்வாய், 9 ஜூலை 2019 (11:19 IST)
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 200% வரி தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
காஷ்மீரில் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானின் தூண்டுதல் இருந்துள்ளது.  
 
எனவே, பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் பணிகளை இந்தியா மேற்கொண்டு வந்தது. அதோடு, பாகிஸ்தானுக்கு 23 ஆண்டுகளாக வழங்கப்பட்ட மிகவும் ஃபேவரைட் நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்தது.  
 
இந்த அந்தஸ்து கொண்ட நாட்டு பொருட்கள் மீது வரி குறைவாக விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த் அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. 
இது குறித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில் தாக்கல் செய்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி பழங்கள், ஜிப்சம், கந்தகம், பதனிடப்பட்ட தோல், தாதுக்கள், தாது எண்ணெய், சிமெண்ட் ஆகியவற்றுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. 
 
இதனால் இந்தியாவுடனான பாகிஸ்தானின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும். இந்திய அரசின் இம்முடிவால் பாகிஸ்தானுக்கு சுமார் ரூ.3,500 கோடி அளவில் வர்த்தகப் பாதிப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகாரத்தை வைத்து ஆட்டத்தை கலைப்பாரா ஓபிஎஸ்? மகனின் வெற்றிக்கு எதிராக வழக்கு!