இந்தியா-துபாய் விமான போக்குவரத்து தொடக்கம்: ஆனால் ஒரு நிபந்தனை!

Webdunia
ஞாயிறு, 20 ஜூன் 2021 (09:01 IST)
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருந்ததால் இந்திய விமானங்களுக்கு துபாய் அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததை அடுத்து மீண்டும் இந்தியா மற்றும் துபாய் இடையேயான விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
 
ஜூன் 23 முதல் இந்தியா தென்னாப்பிரிக்கா நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையின் துபாய்க்கு வரும் பயணிகள் கண்டிப்பாக 2 தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்றும் அதற்கான சான்றிதழ் கையில் வைத்திருக்க வேண்டுமென்றும் அதுமட்டுமின்றி துபாய் அரசு விதிக்கும் 6 விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது 
 
இந்தியா மற்றும் துபாய் இடையே மீண்டும் விமான போக்குவரத்து ஆரம்பித்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அனுமதி என்பது என்பதால் விரைவில் துபாய் செல்லவிருக்கும் பயணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாற வாய்ப்பு உண்டா?

எல்லாம் AI மயம்! மெட்டாவில் மேலும் ஊழியர்கள் நீக்கம்! - அதிர்ச்சியில் ஐடி துறை!

பைக்கில் மோதியதில் தீப்பற்றிய பேருந்து! 21 பேர் உடல் கருகி பலி! - ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் திடீர் உயர்வு? பொதுமக்கள் புகாருக்கு அதிகாரிகள் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments