2030 ஆம் ஆண்டு உலகின் பொருளாதாரத்தில் தலை சிறந்து விளங்கப் போகும் 20 நாடுகள் எது என கணகிடப்பட்டுள்ளது. அவை உங்கள் பார்வைக்கு....
2016 இல் 492 பில்லியன் டாலராக இருக்கும் நைஜீரியாவின் பொருளாதாரம், 2.6 சதவீத வளர்ச்சியுடன் 2030இல் 916 பில்லியன் டாலராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
19. நெதர்லாந்து:
868 பில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் இருக்கும் நெதர்லாந்தின் பொருளாதாரம் 1.5 சதவீதம் வளர்ச்சி பெற்று 2030 இல் 1,089 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
18. சவூதி அரேபியா:
2016-இல் 689 பில்லியன் டாலராக உள்ள சவூதி அரேபியாவின் பொருளாதாரம் 3.3 சதவீத வளர்ச்சியுடன் 1,205 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
17. துருக்கி:
4 % வளர்ச்சி பெற்று இப்போது 2016 இல்923 பில்லியன் டாலராக உள்ள துருக்கியின் பொருளாதாரம் 2030 இல் 1,589 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
16. தென் கொரியா:
நடப்பு ஆண்டு 2016-இல் 1,310 பில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்று இருக்கும் தென் கொரியா 2.1 சதவீதம் வளர்ச்சி பெற்று 1,906 பில்லியன் டாலாரக 2030 இல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
15. ஸ்பெயின்:
பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடான ஸ்பெயின் 1,918 பில்லியன் டாலர்களுடன் 2030இல் இப்போது இருக்கும் 1,479 பில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் 1.7 சதவீதம் வளர்ச்சி பெற்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
14. ஆஸ்திரேலியா:
2016 இல் 1,338 பில்லியன் டாலராக இருக்கும் ஆஸ்த்ரேலியாவின் பொருளாதாரம் 2.5 சதவீதம் வளர்ச்சி பெற்று 1,943 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
13. மெக்ஸிகோ:
இப்போது இருக்கும் 1,244 பில்லியன் டாலர் பொருளாதாரம் 3.3 சதவீதம் வளர்ச்சி பெற்று 1,970 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12. இந்தோனேஷியா:
இந்தோனேஷியாவின் வளர்ச்சி விகிதம் 2016 ஆம் ஆண்டின் 1037 பில்லியன் டாலரில் இருந்து 4.4 சதவீதம் வளர்ச்சி பெற்று 2030 ஆம் ஆண்டு 2077 டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
11. ரஷ்யா:
ரஷ்யாவின் வளர்ச்சி விகிதம் 2016-இல் 1,594 பில்லியன் டாலராக இருக்கிறது. இதுவே 2030 ஆம் ஆண்டு 2.3 சதவீதம் வளர்ச்சி பெற்று 2,219 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10. இத்தாலி:
இத்தாலி இப்போது 2,071 பில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளது. இது 2030 இல் 0.8 சதவீதம் வளர்ச்சி பெற்று 2,350 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
9. கனடா:
கனடா இப்பொது 1,829 பில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது 2030 இல் 2,486 பில்லியன் டாலர்களுடன் 201 சதவீத வளர்ச்சியைப் பெற்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8. பிரேசில்:
2,315 பில்லியன் டாலர்களுடன் இருக்கும் பிரேசில், 2.5 சதவீத பொருளாதார வளர்ச்சியோடு 2030 இல் 3,161 பில்லியன் டாலருடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7. பிரான்ஸ்:
2016 ஆம் ஆண்டு 2,809 பில்லியன் டாலராக இருக்கும் பிரான்ஸின் பொருளாதாரம், 2030 ஆம் ஆண்டு 1.5 சதவீத வளர்ச்சி பெற்று 3,476 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6. ஐக்கிய ராஜ்யம்:
2016 இல் 2,710 பில்லியன் டாலராக இருக்கும் ஐக்கிய ராஜ்யத்தின் பொருளாதாரம் 2.5 சதவீதம் அதிகரித்து 2030 ஆம் ஆண்டு 3,815 கோடியாக இருக்கும் என்று கூரப்படுகிறது.
5. ஜெர்மனி:
ஜெர்மனி பொருளாதாரம் இப்போது 3,747 பில்லியன் டாலாராக இருக்கிறது. இது 2030 ஆம் ஆண்டு 0.9 சதவீதம் உயர்ந்து 4,308 பில்லியன் டாலாரக இருக்கும்.
4. ஜப்பான்:
2016 இல் 5,792 பில்லியன் டாலராக இருக்கும் ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி 2030 இல் 0.7 சதவீதம் வளர்ச்சி பெற்று 6,535 பில்லியன் டாலராக இருக்கும் என்று கூறப்படுகிறது.
3. இந்தியா:
இந்தியாவின் பொருளாதாரம் அளவுக்கு அதிகமாக 6.9 சதவீதமாக அதிகரிக்கும். அதாவது 2016இல் இருக்கும் 2,557 பில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி 2030 இல் 7,287 சதவீதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
2. சீனா:
இப்போது 2016இல் உள்ள 9,307 பில்லியன் டாலராக இருக்கும் பொருளாதார வளர்ச்சியை விட 5 சதவீதம் உயர்ந்து 18,829 பில்லியன் டாலராக இருக்கும் என்று கூறப்படுகிறது.
1. அமெரிக்கா:
2030 ஆம் ஆண்டு அமெர்க்காவின் வளர்ச்சி 23,857 பில்லியன் டாலராக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது இப்போது இருக்கும் 17,149 பில்லியன் டாலரை விட 2.3 சதவீதம் அதிகமாகும்.