ஒசாமா பின்லேடன் தியாகி: பாராளுமன்றத்தில் புகழ்ந்த இம்ரான்கான்
உலகமே தீவிரவாதி என்று அழைத்து வரும் ஒசாமா பின்லேடனை தியாகி என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அழைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் என்று கூறப்படும் கட்டிடங்களை விமானங்களை மோத வைத்ததால் அதில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஒசாமா பின்லேடன் தான் என்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்கா ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானுக்கு நுழைந்து பழிவாங்கியது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இது குறித்து கருத்துக் கூறுகையில் ’பாகிஸ்தானுக்குள் நுழைந்து தியாகி ஒசாமா பின்லேடனை கொன்றது அமெரிக்கா’ என்று கூறியுள்ளார். உலகின் ஆபத்தான தீவிரவாதிகளில் ஒருவர் என்று கூறப்படும் ஒசாமா பின்லேடனை பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் தியாகி என கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது