Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போரா ? பேச்சுவார்த்தையா ? – என்ன சொல்கிறார் பாகிஸ்தான் பிரதமர்

Advertiesment
போரா ? பேச்சுவார்த்தையா ? – என்ன சொல்கிறார் பாகிஸ்தான் பிரதமர்
, வியாழன், 28 பிப்ரவரி 2019 (12:33 IST)
இந்தியா பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் அடுத்தடுத்து எல்லைத் தாண்டி நுழைந்ததாகவும் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுவதால் இரு நாடுகளிலும் பதற்றமான சூழ்ந்லை உருவாகியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் தொடருமானால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூளும் அபாயம் உருவாகும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று கானொலி மூலம் இந்திய அரசைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

இம்ரான் கான் பேச்சின் தமிழ் வடிவம் :-
தீவிரவாதத்தால் நாங்கள்(பாகிஸ்தான்) இதுவரை 70 ஆயிரம் பேரை இழந்து உள்ளோம் ! ஓர் உயிர் போவதால் அந்த குடும்பத்திற்கு எத்தனை இழப்பு..., காயம் பட்டவர்களுக்கு எத்தனை நாள் மருத்துவமனை அலைக்கழிப்பு என்பதை நன்கு அறிவோம். புல்வாமா எனும் துயர சம்பவத்திற்கு பிறகு இரு நாடுகளிடையே அமைதி என்பது மிகவும் அவசியம் ஆகிறது ! இந்த விஷயத்தில் இந்தியாவுடன் முழு ஒத்துழைப்பு நல்குவதற்கு தாயாராகவே உள்ளோம் ! அதில் துளி அளவும் சந்தேகம் வேண்டாம் ! ஆனால் இந்தியா அப்படி இணக்கமாக நடக்குமா என தெரியவில்லை!

ஒருவேளை இந்தியா இதை ஆயுதம் மூலமே பேசுவோம் எனக் கூறினால், அதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம் ! காரணம், எந்த ஒரு நாடும் தன் இறையாண்மை-யை ஒருபோதும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காது ! நேற்று காலையில் இந்தியா தாக்குதல் நடத்திய உடனே நாம் திருப்பி தாக்குதல் நடத்த வில்லை ,. முழுமையாக என்ன நடந்தது என தெரியாமல் ஒரு செயலில் இறங்குவது என் பொறுப்புக்கு அழகல்ல! எனவே உயர் அதிகாரிகள் உடன் பேசினோம்! என்ன சேதம் என்று ஆய்வு செய்தோம் .., அதன் பின் இன்று PAK விமானத்தை அனுப்பினோம்.அதுவும் எந்த தாக்குதலும் நடத்தாமல் திரும்பி வந்தோம் !
webdunia

இந்தியா உள்ளே வந்தால் நாங்களும் உள்ளே வருவோம் என்பதை காட்டுவதற்க்க்கா மட்டுமே அதை செய்தோம் ! இந்தியாவின் இரு விமானங்கள் காலையில் உள்ளே வந்தது..., அதை சுட்டு வீழ்த்தி உள்ளோம்! போர் அறிவு உள்ள அனைவருக்கும் தெரியும்.., எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்று! முதல் உலகப்போர் சில வாரங்களில் முடிந்து இருக்க வேண்டியது... ஆனால் 6 வருடங்கள் தொடர்ந்தது ! War On Terrorism என்ற பெயரில் அமெரிக்கா தொடங்கிய போர்கள் 17 வருடம் தாண்டியும் இன்றும் முடியவில்லை!
நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்...,  உங்களிடம் இருக்கும் அதே ஆயுதம் தான் எங்களிடமும் உள்ளது ! இந்த போர் தொடங்கி விட்டால் எப்போது முடியும் என்பது மோதிக்கும் தெரியாது எனக்கும் தெரியாது ! எத்தனை பெரிய பாதிப்பை உருவாக்கி இருக்கிறது என்பதை நான் உணர்ந்துள்ளேன் ! அதை பேச்சு வார்த்தை மூலமே முடிவுக்கு கொண்டு வர முடியும்! வாருங்கள் அமர்ந்து பேசுவோம் பிரச்சனையை தீர்ப்போம்...!

ஆனால் இந்தியாவில் உள்ள சூழ்நிலைகள் குறித்து இந்திய பிரதமரோ பாதுகாப்புத் துறை அமைச்சரோ இதுவரையில் மக்களிடமோ அல்லது பாகிஸ்தான் அரசிடமோ இதுவரையில் பேசவில்லை.
(இம்ரான் கான் பேச்சின் தமிழ் வடிவம் முகநூலில் இருந்து பெறப்பட்டது)

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’திமுக கூட்டணி ஒன்றுக்கும் உதவாத உருப்படாத கூட்டணி ’- ராஜேந்திர பாலாஜி ஆவேசம்