Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனித மூளை நினைத்திருந்ததை விட 10 மடங்கு சேமிக்கும் ஆற்றல் கொண்டது

Advertiesment
மனித மூளை நினைத்திருந்ததை விட 10 மடங்கு சேமிக்கும் ஆற்றல் கொண்டது
, செவ்வாய், 24 மே 2016 (00:54 IST)
மனிதனின் மூளையின் கொள்ளளவு முன்பு நினைத்திருந்ததை விட பத்து மடங்கு பெரியது என அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். 


 

 
மனிதனின் மூளை சராசரியாக 4.7 பிட்கள் தகவல்களை வைத்திருக்க முடியும். அதாவது ஒரு பெடாபைட் (petabyte) அல்லது 1,000,000,000,000,000 பைட்டுகள் திறனுடையது என்று அர்த்தம்.
 
ஒரு பெடாபைட் என்பது சுமார் 20 மில்லியன் நான்கு டிராயரில் ஃபில்லிங் காபினெட்டுகள் முழுவதும் உரையால் நிரப்பப்படுவது அல்லது 13.3 ஆண்டுகள் எச்டி-டிவி பதிவுகளுக்கு சமம். இது நியூரோ சயின்ஸ் துறையில் ஒரு உண்மையான அதிர்ச்சி தகவல் என்று சல்க் நிறுவனத்தின் பேராசிரியர் மற்றும் eLife பேப்பரின் இணை மூத்த எழுத்தாளரான டெர்ரி செஜ்நோவ்ச்கி கூறியுள்ளார். 
 
மூளைப் பின்மேட்டில் உள்ள நரம்புகளின் செயல்பாடுகள் குறைந்த சக்தியை கொண்டு எப்படி உயர் கணக்கீட்டு ஆற்றலை வெளிப்படுத்துகிறது என்ற வடிவமைப்பு கோட்பாட்டை கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக மின்சாரம் மற்றும் இரசாயன நடவடிக்கைகளின் வடிவங்களாக நம்முடைய மூளையில் நினைவுகள் மற்றும் எண்ணங்கள் வெளிப்படுகின்றன. 
 
சிக்னல்கள் சினாப்ஸிஸ் வழியாக பயணிக்கும்போது ரசாயனங்கள் என்று அழைக்கப்படும் நரம்பியக்கடத்திகள், மற்ற நியூரான்களுக்கு ஒரு எலக்ட்ரிக்கல் சிக்னலை தெரிவிக்க வேண்டும் என்பதை, சிக்னல்களை பெறும் நியூரான்கள் சொல்லும். ஒவ்வொரு நியூரானும் ஆயிரக்கணக்கான மற்ற நியூரான்களை கொண்ட ஆயிரக்கணக்கான சினாப்ஸிஸ்-ஐ கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புகார் செய்ததால் மனைவியை குத்திய கணவர்