Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’மக்கள் எத்தனை துயரத்துடன் இருக்கிறார்கள்’ - ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு கண்ணீர் அஞ்சலி

Advertiesment
’மக்கள் எத்தனை துயரத்துடன் இருக்கிறார்கள்’ - ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு கண்ணீர் அஞ்சலி
, செவ்வாய், 29 நவம்பர் 2016 (14:55 IST)
மக்கள் எத்தனை துயரத்துடன் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும் என்று ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு அஞ்சலி செலுத்திய பெண்மணி ஒருவர் கூறியுள்ளார்.

 
கியூபத் தலைநகர் ஹவானாவில் வசிக்கும் 67 வயதான எர்னெஸ்டினா சுவாரெஸ் என்ற பெண்மணி இப்படி கூறுகிறார். "ஃபிடல் என்றால் மக்கள் என்றுபொருள். நாங்கள் ஒவ்வொருவரும் பிடலை நேசிக்கிறோம்.

நாளைய தினம் ஹவானாவின் புரட்சி சதுக்கம் லட்சக்கணக்கான மக்களால் நிரம்பி வழிய இருக்கிறது. ஒவ்வொருவரும் ஃபிடலை சந்திக்க வருகிறோம். ஒவ்வொருவரும் பிடலுக்கு பிரியாவிடை அளிக்க வருகிறோம்" என்றார்.

ஹவானாவில் டாக்சி டிரைவராக இருக்கும் 50 வயது ஜோர்ஜ் கில்லார்டே கூறுகையில், "கியூபாவின் மக்கள் எத்தனை துயரத்துடன் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது இதயத்தின் துடிப்பாக உணர்ந்து கொண்டிருக்கும் நேசத்திற்குரிய ஒரு மனிதனை இழந்து தவிக்கிறார்கள்" என்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீச்சல் உடை அழகி போட்டியில் பர்தாவுடன் வந்த பெண்ணுக்கு பாராட்டு