Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலைவனத்தில் பனிப்புயல் – மெக்ஸிகோவில் ஆச்சர்யம்

Advertiesment
பாலைவனத்தில் பனிப்புயல் – மெக்ஸிகோவில் ஆச்சர்யம்
, செவ்வாய், 2 ஜூலை 2019 (19:12 IST)
மெக்ஸிகோவில் வெயில் தகிக்கும் ஊரில் பனிப்புயல் அடித்திருப்பது அங்குள்ளவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மெக்ஸிகோவில் உள்ள சிறுநகரம் குவாதாலஜாரா. மெக்ஸிகோ தேசமே அதிகமான வெயில் அடிக்கும், வறட்சியான தேசம்தான். இந்நிலையில் பனிப்புயல் ஒன்று அடித்ததால் அந்த நகரத்தின் சில பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு பனி நிறைந்துள்ளது.

புயலில் சிக்கிய இலை தழைகள் அந்த பனியோடு உறைந்து காணப்படுகின்றன. கார்கள், பாதைகள் அனைத்திலும் பனி நிறைந்து காணப்படுகிறது. இந்த மாதிரியான பனிப்பகுதியை படங்களில் மட்டுமே பார்த்த குழந்தைகள் அதில் இறங்கி விளையாடுவது, பொம்மைகள் செய்வதுமாக இருக்கிறார்கள். பாதைகளில் உள்ள பனிகளை இயந்திரங்கள் கொண்டு அகற்றி வருகின்றனர். இந்த புயலில் எந்த வித உயிர்சேதமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து வானிலை அறிஞர்கள் “மிகவும் அபூர்வமாக இது போன்ற வானிலை மாற்றங்கள் நடப்பது உண்டு. புயலில் தண்ணீர் குளிர்ந்து பனியாகியிருக்கிறது. அதிகமான பாரத்தால் மெக்ஸிகோவில் சில பகுதிகளில் இந்த பனிகள் விழுந்திருக்கின்றன” என்று தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணன் மகளை மிரட்டி பலாத்காரம் செய்த சித்தப்பா: கோவாவில் நடந்த துயர சமபவம்