Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானை புரட்டிப் போட்ட மழை - பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு

Webdunia
செவ்வாய், 10 ஜூலை 2018 (15:34 IST)
ஜப்பானில் பெய்து வரும் கன மழையில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.
ஜப்பானில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் மண் சரிவு ஏற்பட்டு பல இடங்களில் முழுவதுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். பலர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். 
 
ஜப்பானின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் பலர் வீடுகளை இழந்தும் உடமைகள், கார்கள் அனைத்தும் இழந்து பரிதவிக்கின்றனர். பலர் அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போகியுள்ளனர். நேற்றுவரை இந்த துயர சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 100 ஆக இருந்தது.
 
இந்நிலையில், இன்று ஜப்பான் அரசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பலி எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளதாகவும், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments