தெற்கு ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

Mahendran
வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (14:05 IST)
தெற்கு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜப்பானின் தெற்கு தீவு பகுதியிலுள்ள கியூசு என்ற பகுதியில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது என்று தெரிகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 என்ற பதிவானதாகவும் இரண்டாவது ஆக நிகழ்ந்த நிலநடுக்கம் 7.1 என பதிவானதாகவும் கூறப்படுகிறது.
 
அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம்  ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கடலோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷ் பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்குத் தொடர் கனமழை! வானிலை எச்சரிக்கை..!

350% வரி விதிப்பேன் என மிரட்டினேன்.. உடனே மோடி போரை நிறுத்திவிட்டார்: டிரம்ப்

வேண்டுமென்றே குறைபாடுகளுடன் அறிக்கை சமர்ப்பித்தது தமிழக அரசு.. கோவை, மதுரை மெட்ரோ குறித்து அண்ணாமலை..!

தையல் போடுவற்கு பதில் 5 ரூபாய் பெவிக்யிக்கை ஒட்டிய டாக்டர்.. சிறுவனின் உயிரில் விளையாடுவதா?

ஏடிஎம்-இல் பணம் நிரப்பும் நிறுவனத்தின் வாகனம் கொள்ளை.. ரூ.7 கோடி பணம் என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments