7 வயது சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை!

7 வயது சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2017 (11:15 IST)
ஈரான் நாட்டில் 7 வயது சிறுமி ஒருவரை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நபருக்கு பொது இடத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


 
 
அடெனா அஸ்லானி என்ற ஈரான் நாட்டைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி காணாமல் போனதாக கூறப்பட்டது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலானது. இந்த புகாரின் பேரில் விசாரணையை மேற்கொண்டனர். அதில் 7 வயது சிறுமியை போலீசார், ஜாஃபர்ஸாடே என்பவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்டனர்.
 
அதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் ஜாஃபர்ஸாடே அந்த சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவருக்கு செப்டம்பர் 11-ஆம் தேதி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது.
 
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெண் ஒருவரின் கொலையிலும் இந்த நபருக்கு தொடர்பு இருப்பதாக அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். இந்நிலையில் அவருக்கு பொது இடத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்