Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூகுள் நிறுவனத்துக்கு 1900 கோடி ருபாய் அபராதம்… ஏன் தெரியுமா?

கூகுள் நிறுவனத்துக்கு 1900 கோடி ருபாய் அபராதம்… ஏன் தெரியுமா?
, சனி, 18 ஜூன் 2022 (15:14 IST)
உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றான கூகுள் நிறுவனத்துக்கு மெக்சிகோ நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

Ulrich Richter Morales என்ற மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த குற்றவியல் வழக்கறிஞர் ஆவார். இவர் கூகுளுக்கு எதிராக கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்ந்தார். தன்னை போதைப்பொருள் கடத்தல், பணமோசடி மற்றும் ஆவணங்களை பொய்யாக்குதல் போன்ற குற்றங்களுடன் தொடர்புபடுத்தும் கூகுள் நடத்தும் ஒரு வலைதளத்தில் போலியாக குற்றம் சாட்டியுள்ளதாக அவ்ர் வாதாடினார்.

ஆன்லைனில் இருக்கும், ஆனால் 2014 முதல் புதுப்பிக்கப்படாத இந்த வலைப்பதிவு, ரிட்சர் தாய்நாட்டிற்கு எதிரான அவரது வெறுக்கத்தக்க செயல்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இதனால் தனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக அவர் தொடர்ந்த வழக்கில் இப்போது கூகுளுக்கு 196.4 மில்லியன் அமெரிக்கா டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் இந்த எதிர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீகாரில் ரூ.200 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்