இங்கிலாந்தில், திருட்டுப் போன பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் குறித்து துப்புக் கொடுப்பவர்களுக்கு ரூ.57 கோடி சன் மானம் அளிக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில், பிரபல பார்முலா -1 கார் பந்தய போட்டிகளை நடத்தி வருபவர் பெர்னி எக்லெஸ்டோன். இங்கிலாந்தின் பிரபல தொழிலதிபரான இவரது மகள் தமரா. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தன் குடும்பத்தினருடன் ஒரு தனி விமானத்தில் சென்றுள்ளார்.
அப்போது, அவரது வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் திருட்டுப்போனது. திருட்டுப் போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.247 கோடி ஆகும். இதுகுறித்து தமரா காவல் நிலையத்தில் புகார் அளித்தும்,இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இந்த நிலலையில், தமரா, தனது நகைகள் குறித்து துப்புக் கொடுத்தால் அந்த நகைகளின் மதிப்பில் 25%( ரூ.57) கோடி சன்மானமாக வழங்கத் தயாராக உள்ளதாக தெரிகிறது.