Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எப்படிலாம் யோசிக்கிறாங்க......ஆடு யோகா: தெரியுமா உங்களுக்கு???

Advertiesment
ஆடு யோகா
, வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (11:57 IST)
அமெரிக்காவில் உள்ள ஓரிகன் மாகாணத்தில் ஆடு யோகா(goat yoga) மிகவும் பிரபலமாகி வருகிறது. ஆடுகளை வைத்துச் செய்யக்கூடிய யோகா இல்லை இது. யோகா செய்யும் மனிதர்களுடன் நட்பாக விளையாடுகின்றன ஆடுகள். 


 
 
புகைப்படக்காரராக இருந்து வந்த லெய்னி மோர்ஸ் உடல் நல கோளாறு காரணமாக வேலையை விட்டு பண்ணை ஒன்றை வாங்கினார். இந்த இடத்தைப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டி வந்தார். 
 
யோகா மாஸ்டர் ஒருவருடன் இணைந்து சுத்தமான காற்றும் பசுமையான தோட்டமுமாக இருக்கும் பண்ணையில் யோகா வகுப்புபை தொடங்கினார். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு ஆடுகளைப் பயன்படுத்திக் கொண்டனர்.
 
யோகா செய்யும்போது ஆடுகள் உள்ளே நுழைந்து விளையாடுகின்றன. யோகா விரிப்பில் அமர்ந்துகொள்கின்றன. சீரியஸாக யோகா செய்யும்போது, ஆடுகளின் வருகை எல்லோருக்கும் உற்சாகம் தந்துவிடுகிறது. மன அழுத்தம் குறைகிறது. ‘ஆடு யோகா’ என்ற பெயர் வேகமாகப் பரவிவிட்டது.
 
’இந்த வெற்றியை நாங்களே எதிர்பார்க்கவில்லை. 100 மைல் தொலைவில் இருந்தெல்லாம் யோகா வகுப்புக்கு வருகிறார்கள்’ என்கிறார் லெய்னி மோர்ஸ்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரத்தம் கொடுப்போம்; தண்ணீர் தர மாட்டோம் : கையை அறுத்து கன்னட அமைப்பினர் போராட்டம்