அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் ஒரு கண்டெய்னரில் கடந்த இரண்டு மாத காலமாக சங்கிலியால் கட்டப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர்.
அந்த பகுதியில் வசித்து வந்த டாட் கோஹௌப் என்பவர், ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். சமீபத்தில் அவருக்கு சொந்தமான இடத்தில் அமெரிக்க போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு கண்டெய்னர் இருந்துள்ளது. அதை கடப்பாறையை ரம்பம் மற்றும் கடப்பாரை போன்ற கருவிகளை பயன்படுத்தி உடைத்து திறந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
காரணம், அந்த கண்டெய்னரில் ஒரு இளம்பெண் கழுத்து மற்றும் கால் பகுதிகள் சங்கிலியால் கட்டப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அவரை மீட்ட அதிகாரிகள் அப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அப்பெண்ணின் பெயர் கலா ப்ரௌன் என்பதும், கடந்த 2 மாதங்களாக அந்த பெண் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
அதாவது, 2 மாதங்களுக்கு முன்பு ப்ரௌன் தனது ஆண் நண்பருடன் டாட் கொஹௌப்பை சந்திக்க சென்றுள்ளார். அப்போது ஆண் நண்பரை டாட் கோஹௌப் கொலை செய்துள்ளார். மேலும், கலா ப்ரௌனை அந்த கண்டெய்னரில் அடைத்து வைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.