Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாக்கிய பெண் யார்? - பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கண்ணீர் பேட்டி

Advertiesment
தாக்கிய பெண் யார்? - பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கண்ணீர் பேட்டி
, புதன், 7 ஜூன் 2017 (11:47 IST)
6 வயது சிறுமியை ஒரு வயதான பெண் பிரம்பால் தாக்கும் காட்சி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


 

 
சாப்பிடும் உணவை சிந்திய 6 வயது சிறுமியை, 50 வயதிற்கும் மேற்பட்ட பெண் ஒருவர் தன் கையில் உள்ள பிரம்பால், தொடர்ச்சியாக நில நிமிடங்கள் கொடூரமாக அடித்து துவைக்கும் அந்த வீடியோவை கண்ட பலரும் மனம் பதபதைத்தனர்.  அந்த பெண் சிறுமியை அடிப்பதை, அங்கிருந்த ஒரு பெண் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இதையடுத்து இந்த வீடியோ பலரும் பகிர்ந்து கொண்டதோடு, அந்த பெண்ணை கைது செய்ய வேண்டும் என குரல் கொடுத்திருந்தனர்.
 
இந்நிலையில், இந்த சம்பவம் மலேசியாவில் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. அதோடு, பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் தந்தை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், தனது குழந்தையை தாக்கியது தனது மாமியார் எனவும், அதை வீடியோ எடுத்தது தனது மாமியாரின் தோழி எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து தனது மாமியார் மற்றும் மகளை அடித்த போது தடுக்காமல் அதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த மாமியாரின் தோழி என இருவர் மீது போலீசாரிடம் புகார் அளித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Courtesy to Tamil saithi

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தையை பெற்று கூரையில் வீசி கொன்ற பள்ளி மாணவி!