Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பலூன்களுக்கு தடை: கேஸ் பலூன் வெடித்து 31பேர் படுகாயம்

Advertiesment
பலூன்களுக்கு தடை: கேஸ் பலூன் வெடித்து 31பேர் படுகாயம்
, சனி, 22 அக்டோபர் 2016 (18:34 IST)
மலேசியாவில் கேஸ் பலூன் வெடித்து 31 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் பலூன்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.


 

 
மலேசியாவின் டெரங்கனு மாநிலத்தில் உள்ள பூங்கா ஒன்றில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் உலக பார்வை தின விழா நடைப்பெற்றது. அப்போது ஹட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் காற்றில் பறக்க விட தயாரான நிலையில் இருந்தது.
 
அதை காண அங்கு கூட்டம் கூடியிருந்தது. சுமார் 150 பலூன்கள் பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியது. அதில் குழந்தைகள் உள்பட 31 பேர் படுகாயம் அடைந்தனர். பலரது முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது.
 
இதனால் அந்த மாநிலத்தில் தற்காலிகமாக பலூன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் குறித்து வதந்தி பரப்பியதாக கைதானவர்களை விடுவிக்க வேண்டும்: ஆம்னெஸ்டி