நம்மூரில் ஒரு சைக்கிளின் விலை என்னவாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பிரான்ஸ் நாட்டில் வெளிவந்துள்ள புதிய மாடல் சைக்கிளின் விலை என்ன தெரியுமா>? 9100 அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ.6 லட்சம். அப்படி என்ன இருக்கின்றது இந்த சைக்கிளில் என்று பார்ப்போம்
இந்த சைக்கிள்தான் உலகில் முதன்முதலாக ஹைட்ரஜன் எரிவாயு உதவியால் இயங்கும் சைக்கிள். பிரான்ஸ் நாட்டின் பிராக்மா என்ற நிறுவனம் இந்த சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
உலகின் மிக அதிக விலையுள்ள சைக்கிள் என்ற பெருமையை பெற்றுள்ள இந்த சைக்கிளில் இரண்டு லிட்டர் ஹைட்ரஜனை நிரப்பினால் 100 கிமீ வரை பயணம் செய்யலாம். சுற்றுச்சூழல் சிறிதும் கெடாத வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சைக்கிளில் பயணம் செய்வது சொகுசான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சைக்கிளுக்கு நார்வே, அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து ஆர்டர்கள் குவிகிறதாம். ஆனால் இந்த நிறுவனம் வருடத்திற்கு 150 சைக்கிள்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.