Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நேதாஜி மர்ம மரணம்: ஆதாரங்களை போட்டுடைக்கும் பிரான்ஸ்!!

Advertiesment
நேதாஜி மர்ம மரணம்: ஆதாரங்களை போட்டுடைக்கும் பிரான்ஸ்!!
, திங்கள், 17 ஜூலை 2017 (15:37 IST)
இந்திய விடுதலை போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை என்று பிரான்ஸ் ஆதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளது. 


 
 
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி நடந்த விமான விபத்தில் அவர் இறக்கவில்லை. மேலும் 1947 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி நடந்த விமான விபத்துலும் அவர் இறக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
 
சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறந்தார் என்பதே பொய்யான கூற்று. இதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என தெரிவித்துள்ளனர். விமான விபத்தில் இறக்கவில்லை என்றால் அவர் எப்படி இறந்தார் என்ற கேள்வி வலுவடைந்ததுள்ளது.
 
மத்திய அரசு மற்றும் மேற்கு வங்க அரசு  நேதாஜி மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன்கள் அமைத்தும் ஆவணங்களை தேடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த அம்பானி இவரா? அதிர்ச்சியில் இந்திய தொழிலதிபர்கள்