பிரென்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனை ஓரினச்சேர்க்கையாளர் என டேனிஷ் எம்பி ஒருவர் திட்டியது கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
அவர் கூறியதாவது, தமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால் தாம் கண்டிப்பாக மரைன் லீ பென்னுக்கு வாக்களித்திருப்பேன் எனவும், எந்த காரணத்தைக் கொண்டும் மேக்ரோன் போன்ற ஓரினச்சேர்க்கையாளர் சிறுவனுக்கு வாக்களித்திருக்க மாட்டேன் எனவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டேனிஷ் அரசியல்வாதியின் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும், டேனிஷ் எம்பி மன்னிப்பு கேட்க வேண்டும் என மேக்ரோன் ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர்.