ஆப்பிரிக்க நாட்டில் உள்நாட்டு கலவரத்தை தூண்டியதாக முன்னாள் பிரதமருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடான சாட் நாட்டின் அதிபராக இருந்து வந்தவர் இட்ரிஸ் டெனி இட்னோ. கடந்த 2021ம் ஆண்டில் அரசுக்கு எதிராக அந்நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சியில் அவர் கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து அவரது மகன் மஹாமத் டெபி ஆட்சியை கைப்பற்ற, அதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தன, அதில் முன்னாள் சாட் பிரதமரான சக்ஸஸ் மஸ்ராவும் ஒருவர்.
இந்நிலையில் சமீபத்தில் அந்நாட்டில் விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 35 பேர் உயிரிழந்தனர். இந்த கலவரத்தை தூண்டியதாக சக்ஸஸ் மஸ்ரா மீது குற்றம் சாட்டி போலீஸார் அவரை கைது செய்தனர். நீதிமன்ற விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபணமான நிலையில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை, 15 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது சாட் அதிபர் தன் மீது வேண்டுமென்றே ஜோடிக்கும் கதை என மஸ்ரா கூறியுள்ளார்.
Edit by prasanth.K