உலகில் எந்தப் பதவியில் வகிப்போரும் , ஊழல் குற்றச்சாட்டிக்கு ஆளானால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பது எல்லா நாடுகளுக்கும் பொதுவான ஒன்றுதான்.
அந்த வகையில், பிரான்ஸ் நாட்டு முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வந்த பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோசிக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இத்தீர்ப்பு நிகோலஸ் ஆதரவாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.