Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.7,000-த்திற்கு விற்கப்படும் காபி பாக்கெட்... மோசமான வட கொரியா நிலை!

Advertiesment
ரூ.7,000-த்திற்கு விற்கப்படும் காபி பாக்கெட்... மோசமான வட கொரியா நிலை!
, திங்கள், 21 ஜூன் 2021 (10:24 IST)
வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் சிறிய காபி பாக்கெட்டின் விலை இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.7,000 வரை உயர்ந்துள்ளது என தகவல். 

 
உலக நாடுகளில் இருந்து தொடர்ந்து வட கொரியா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டே வருகிறது. முன்னதாக வடகொரியா ஆயுத சோதனைகள் நடத்தியதால் அமெரிக்காவுடன் மோதல் எழுந்துள்ள நிலையில், வடகொரியாவின் நடவடிக்கைகளை உலக நாடுகளும் கண்டித்து வருகின்றன.
 
இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பரவிய நிலையிலும் தங்கள் நாட்டில் கொரோனா இல்லை என தொடர்ந்து வடகொரியா கூறி வந்த நிலையில், சமீபத்தில் தான் கொரோனா பாதிப்புகளை ஒத்துக் கொண்டது. இந்நிலையில் வடகொரியாவில் சூறாவளி, கொரோனா போன்ற காரணங்களால் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
வட கொரியாவில் மக்கள் 2 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உணவு உண்பதாகவும், வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் சிறிய காபி பாக்கெட்டின் விலை இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.7,000 வரை உயர்ந்துள்ளதாகவும், ப்ளாக் டீ ரூ.5,167 ஆகவும்ஒரு கிலோ வாழைப்பழம் ரூ.3,300-க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. 
 
இதனிடையே, உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது உண்மைதான் என அதிபர் கிம் ஜாங் உன் ஒத்துக் கொண்டுள்ளார். மேலும் 1994 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட உணவுப்பஞ்ச காலத்தை சமாளித்தது போல் இப்போதும் இதனை சமாளிக்க தயாராகுமாறு அதிபர் கிம் ஜாங் உன் அறிவுறுத்தியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பது வதந்தியா?