இஸ்ரேல் - ஹமாஸ் இடையே மீண்டும் அமைதி ஒப்பந்தம் உண்டாகியுள்ள நிலையில் இருதரப்புக்கும் ஐ.நா அறிவுரைகளை வழங்கியுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 2 ஆண்டுகளாக போர் நடந்து வரும் நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களால் 68 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். முன்னதாக அமெரிக்க தலையீட்டில் அமைதி ஒப்பந்தம் கொண்டு வரப்பட்ட நிலையில், இஸ்ரேல் மீண்டும் காசாவில் தாக்குதல் நடத்தி வந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே முதற்கட்ட அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அமைதி ஒப்பந்தத்தை முறையாக கடைபிடிக்கும்படி ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரேஸ் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் “ஒப்பந்தத்தை முறையாக கடைபிடிக்குமாறு ஹமாஸை கேட்டுக் கொள்கிறேன். அனைத்து பணையக்கைதிகளையும் ஹமாஸ் கண்ணியமான முறையில் விடுவிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் காசா மக்களுக்கு எந்த தங்கு தடையுமின்றி செல்வதை இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K