மதுரையில் கட்டப்பட்டுள்ள புதிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தோனி திறந்து வைக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் உள்ள நிலையில் சென்னைக்கு அடுத்தப்படியாக தென் தமிழகத்தில் கிரிக்கெட் விளையாட்டை சிறப்பிக்கும் விதமாக மதுரையில் புதிய கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டுள்ளது. ரூ.350 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வேலம்மாள் கிரிக்கெட் மைதானம் மதுரையின் புதிய அடையாளமாக மாற உள்ளது.
இந்த கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வரும் காலங்களில் டிஎன்பிஎல், ஐபிஎல் போட்டிகள், உள்நாட்டு ட்ராபி போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த கிரிக்கெட் மைதானத்தை இன்று கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி திறந்து வைக்க உள்ள நிலையில், தோனி ரசிகர்கள் மதுரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
Edit by Prasanth.K