Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நதியில் மிதக்கும் பிரம்மாண்ட விமான நிலையம்

நதியில் மிதக்கும் பிரம்மாண்ட விமான நிலையம்
, வெள்ளி, 8 ஜூலை 2016 (13:49 IST)
தெற்கு இங்கிலாந்து பகுதியில் அமைந்துள்ள தேம்ஸ் நதியில் மிதக்கும் விமான நிலையத்தை அமைக்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டிருக்கிறது.


 

 
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ’ஹீத்ரூ’ உலகிலேயே அதிக போக்குவரத்து கொண்ட விமான நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. போக்குவரத்து நெரிதல் காரணமாக, ஹீத்ரூ விமான நிலையத்தை விரிவுப்படுத்த திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அது சுற்றுச்சூழலை வெகுவாக பாதிக்கும், நிலத்தை கையகப்படுத்த பல கிராமங்களை அழிக வேண்டி இருக்கும்.
 
எனவே, இதற்கான மாற்று திட்டமாக தேம்ஸ் நதியில் பிரம்மாண்ட மிதக்கும் விமான நிலையத்தை அமைக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த மிதக்கும் விமான நிலையம் லண்டன் பிரிட்டானியா விமான நிலையம் என்று அழைக்கப்படும்.
 
மத்திய லண்டன் மாநகரிலிருந்து கிழக்கு பகுதியில் சுமார் 70 கிமீ தொலைவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. விமான நிலையம் 6 ஓடுபாதைகளைப் பெற்றிருக்கும். இருபுறமும் ஓடுபாதைகளுக்கு நடுவில் விமான முனையம் அமையும். அங்கிருந்து நகரை இணைப்பதற்கான போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக செய்யப்படும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது.
 
இந்த பிரம்மாண்ட மிதக்கும் விமான நிலையத்தை உருவாக்க 5 லட்சம் கோடி தொகையாகும் என திட்ட மதிப்பீட்டில் கூறப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவிக்காக சுல்தான் பட அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கி அசத்திய அன்பு கணவர்