நேற்று சூரிய கிரகணம் நடந்தபோது சூரியனை எமிரேட்ஸ் விமானம் கடந்து சென்றதை உக்ரைன் போட்டோகிராபர் எடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.
நேற்று சூரிய கிரகணம் நடைபெற்ற நிலையில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இந்த கிரகணத்தை பார்க்க முடிந்தது. இந்தியாவில் ஹைதராபாத், பெங்களூரு, விசாகப்பட்டினம், மங்களூர், சென்னை, திருவனந்தபுரம், கோயம்புத்தூர், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் 18% முதல் 25% வரை சூரிய கிரகணத்தை மக்கள் கண்டு களித்தனர்.
சூரிய கிரகணத்தின்போது சூரியனுக்கு முன்னால் விமானம் கடந்து செல்லும் அரிய காட்சியை சிலர் படம் பிடித்துள்ளனர். பிலிப் சால்கெபர் என்ற வானியல் புகைப்படக்காரர் அவ்வாறாக விமானம் கடந்து செல்வதை வீடியோவே எடுத்துள்ளார்.
பாரிஸிலிருந்து துபாய்க்கு சென்ற எமிரேட்ஸ் ஏ380 ஏ6 விமானம் ஒன்று சூரிய கிரகணம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது சூரியனுக்கு முன்னால் கடந்து சென்றதை அவர் வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதேபோல சென்னையை சேர்ந்த புகைப்படக்காரர் ஒருவரும் கிரகணத்தின்போது சூரியனை கடந்து வந்த விமானம் ஒன்றை படம் பிடித்துள்ளார். இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.