சிறைச்சாலையில் அடிதடி : கைதிகள் பலர் கொலை - திடுக்கிடும் சம்பவம்

Webdunia
திங்கள், 20 மே 2019 (15:51 IST)
தஜிகிஸ்தான் நாட்டில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட கலவரத்தில் பலர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஜிகிஸ்தான் நாட்டில் உள்ள பிரலமான சிறையில் ஏற்பட்ட கலவரத்தில்  32 பேர் கொல்லப்பட்டனர்.

தலைநகர் துஷான்பேவுக்கு அருகில் உள்ளது வாக்டட் சிறை. அங்கு 1500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
 
இந்தக் கைதிகளில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினரும் உள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆயினும் ஞாயிற்றுக் கிழமை அன்று 3 காவலர்கள் மற்றும் ஐந்து கைதிகளை ஐ எஸ் தீவிரவாதிகள் கொலை செய்ததால் அங்கு கலவரம் ஏற்பட்டது.
 
இதனையடுத்து  சிறைப் பாதுகாவலர்கள் அங்கு கலவரத்தை அடக்க முயன்றனர். ஆனால் கட்டுக்கு மீறிய மோதலால் வீரர்கள் துப்பாக்கிச்சூடு  நடத்தினர்.
 
இதில் 24 கைதிகள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தற்பொழுது விசாரணை நடைபெற்றுவருதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIRஐ எதிர்த்து திமுக சட்ட போராட்டம்.. ஆனால் ஆவின் பால் பாக்கெட்டுகளில் SIR குறித்து விழிப்புணர்வு..!

ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தார்.. திமுக நிர்வாகி மீது பெண் திடுக்கிடும் புகார்..!

துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு காசி சாமியார்கள் ஆசீர்வாதம்! முதல்வராக சிறப்பு பூஜையா?

சிந்து மீண்டும் இந்தியாவுடன் இணைய வாய்ப்பு: அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பரபரப்பு கருத்து

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ முன் ஆஜரான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா.. !

அடுத்த கட்டுரையில்
Show comments