Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆப்கானிஸ்தான்: முழுக்க முழுக்க பெண்கள் நடத்தும் தொலைக்காட்சி

Advertiesment
, திங்கள், 22 மே 2017 (06:38 IST)
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கல்வி உள்பட பல உரிமைகள், சுதந்திரங்கள் மறுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்நாடு கொஞ்சம் கொஞ்சமாக ஜனநாயக பாதைக்கு திரும்பி வருகிறது.



 


தலிபான்களின் கொட்டம் ஓரளவு அடங்கிய பின்னர் பெண்கள் பல உரிமைகளை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் முழுக்க முழுக்க பெண்கள் நடத்தும் தொலைக்காட்சி சேனல் ஒன்று ஆப்கானிஸ்தானில் தொடங்கப்பட்டுள்ளது.

 ஸான் டி.வி. என்ற பெயரில் இயங்கும் இந்த தொலைக்காட்சியில் தொகுப்பாளர்கள் அனைவரும் பெண்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக மூடநம்பிக்கையுடன் கூடிய கட்டுப்பாடுகளை உடைப்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாக இந்த தொலைக்காட்சியின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

இந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் 20 வயது இளம்பெண் காதிரா கூறியபோது, 'முழுவதும் பெண்களால் நடத்தப்படும் இந்த தொலைக்காட்சி தொடங்கியிருப்பதில் மகிழ்ச்சி, இந்த சேனல் பெண்களுக்கான உரிமைகளை பறை சாற்றி அவர்கள் இழந்த உரிமைகளை மீண்டும் பெற்று தரும் என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை கஸ்தூரிக்கு சிவப்பு விளக்கா? விதி யாரை விட்டது?