Publish Date: Tue, 10 Mar 2020 (15:58 IST)
Updated Date: Tue, 10 Mar 2020 (16:01 IST)
கனடா நாட்டில் கொரோனா வைரஸால் முதியோர் இல்லத்தில் முதியவர் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
சீனாவை தொடர்ந்து 100 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் உலகளவில் இதுவரை 4000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கனடா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்துக்குட்பட்ட வடக்கு வான்கோவர் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார்.
இது கனடாவின் முதல் கொரோனா பலி ஆகும். மேலும் கனடாவில் 70 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.