Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்காவில் தொடரும் பயங்கரம்; தொழிற்சாலையில் துப்பாக்கிச்சூடு!

அமெரிக்காவில் தொடரும் பயங்கரம்; தொழிற்சாலையில் துப்பாக்கிச்சூடு!
, வெள்ளி, 10 ஜூன் 2022 (09:00 IST)
மேரிலேண்ட் மாகாணத்தில் ஸ்மித்ஸ்பர்க் நகரில் தொழிற்சாலை ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

 
அமெரிக்காவில் சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாணவர்கள் 19 பேர், ஆசிரியர்கள் 2 பேர் என மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்து நியூயார்க் மாகாணம் பப்பலோ நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஒரு நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்தனர். 
 
இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் பலியாகினர். விஸ்கான்சின் மாகாணத்தில் இறந்த ஒருவரை கல்லறை தோட்டத்தில் புதைக்க சென்றபோது அங்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த மக்கள் மீது சரமாரி துப்பாக்கிசூட்டை நடத்தினார்.
 
இந்நிலையில் அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டிற்கான சட்டங்களை கடுமையாக்கும்படி அதிபர் ஜோ பைடன் சட்டக்குழுவிற்கு கோரிக்கை விடுத்தது. இதனால் நியூயார்க் மாகாண கவர்னர் நியூயார்க்கில் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்தி சட்டம் இயற்றினார். 
 
அதன்படி இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் துப்பாக்கி வாங்கலாம் என்றிருந்த நிலையில், இனி 21 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் துப்பாக்கி விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்காவின் மேரிலேண்டில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேரிலேண்ட் மாகாணத்தில் ஸ்மித்ஸ்பர்க் நகரில் தொழிற்சாலை ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் விலங்குக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகம்!