Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியைக் காப்பாற்றச் சென்ற கணவரின் உயிர் ஊசல்: பரபரப்பு தகவல்

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (21:41 IST)
மனைவியைக் காப்பாற்றச் சென்ற கணவரின் உயிர் ஊசல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் தீ விபத்தில் சிக்கிய மனைவியை காப்பாற்ற முயன்ற கணவருக்கு 90% தீ காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தீ விபத்தில் சிக்கிய மனைவி 10 சதவீதத்தை காயத்துடன் உயிர் தப்பியதாகவும் வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கேரளாவைச் சேர்ந்த அனில் மற்றும் அவருடைய மனைவி நீனு ஆகியோர் வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு 4 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் திடீரென மின்சார பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது நீனுவும் மற்றும் அவரது மகனும் தீயில் சிக்கி கொண்டனர். இதை பார்த்து படுக்கை அறையில் இருந்து பதறியபடி ஓடி வந்த அனில், மனைவியையும் மகனையும் காப்பாற்றுவதற்காக தன் உயிரையும் பொருட்படுத்தாது காப்பாற்றினார். 
 
இருவரையும் காப்பாற்றி விட்ட நிலையில் அனில் எதிர்பாராதவிதமாக தீயில் சிக்கிக்கொண்டார். இதில் அவருக்கு 90 சதவீத காயம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருக்கிறார். மனைவியையும் மகனையும் காப்பாற்ற தன் உயிரையும் பொருட்படுத்தாது செயல்பட்ட கணவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அவர் விரைவில் குணமாக சமூகவலைதள பயனாளிகள் பிரார்த்தனை செய்து வருகின்றனர் பிரபல துணிக்கடை காக பழமையான மரம் வெட்டப்பட்டது சென்னை பாண்டிபஜாரில் பரபரப்பில் சென்னை பாண்டிபஜார் சமீபத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீனமயமாக்க பட்டது என்பது தெரிந்ததே 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments