Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளம்பெண்ணை உயிரோடு கொளுத்திய இளைஞர்: அதிர்ச்சி காரணம்

Advertiesment
இளம்பெண்ணை உயிரோடு கொளுத்திய இளைஞர்: அதிர்ச்சி காரணம்
, திங்கள், 10 பிப்ரவரி 2020 (15:28 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு இளைஞன் ஒரு பெண்ணை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்தார். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த இளைஞன் மீண்டும் ஒரு 24 வயது பெண்ணை காதலித்துள்ளார் அந்தப் பெண்ணும் தன்னை காதலிக்க வேண்டும் என்று அவர் கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால் அங்கீதா என்ற அந்த இளம்பெண்  இளைஞரின் காதலை ஏற்க முன்வரவில்லை. ஏற்கனவே திருமணமான உங்களுக்கு இன்னொரு காதல் எதற்கு என அவமானப்படுத்தி அனுப்பி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞன் அந்த இளம் பெண்ணை தீ வைத்து உயிரோடு கொளுத்தினார்.
 
இதனால் கடுமையான தீக்காயம் ஏற்பட்ட இளம்பெண் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வந்தார். அவருடைய உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சற்று முன்னர் அங்கீதா மரணமடைந்தார் 
இதனை அடுத்து அங்கு தீ வைத்த இளைஞர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ள ஒருவர் மீண்டும் காதலித்து ஒரு பெண்ணின் மரணத்திற்கு காரணமாக இருந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவின் கையெழுத்து இயக்கம்... நாட்டுக்கு செய்யும் துரோகம் - நடிகர் ராதாரவி