Publish Date: Tue, 02 Apr 2019 (15:32 IST)
Updated Date: Tue, 02 Apr 2019 (15:39 IST)
அமெரிக்காவில் நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவில் பாம்பு தாக்க வரும்போது எலி அசுர வேகத்தில் தன்னை தற்காத்துக்கொள்ள பாம்பை எட்டி உதைக்கும் காட்சி வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் விஷப்பாம்பு தாக்கும் போது எலி எந்த வேகத்தில் பாம்பிடம் இருந்து தப்பிக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. விஷப்பாம்பு ஒன்று எலியை இரையாக்க அதன் அருகே சென்றது.
நொடிப்பொழுதில் சுதாரித்துக்கொண்ட எலி மின்னல் வேகத்தில் எகிறி பாம்பின் பொடனியிலேயே எட்டி உதைத்தது. இதனால் நிலைகுலைந்துபோன பாம்பு அங்கிருந்து சென்றது. இதே போல நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் கங்காரு வகை எலிகள் மின்னல் வேகத்தில் பாம்பிடம் இருந்து தப்பிக்கின்றன. கங்காரு எலியின் இந்த மின்னல் வேகம் ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைத்துள்ளது.
webdunia
Publish Date: Tue, 02 Apr 2019 (15:32 IST)
Updated Date: Tue, 02 Apr 2019 (15:39 IST)