ஜப்பான் நாட்டில் மகன் பள்ளித் தேர்வில் தோல்வி அடைந்ததால், தந்தையே மகனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டில் சிறந்த பள்ளிகளில் சேர்க்கைக்காக நுழைவுத் தேர்வு நடத்துவது வழக்கம். கெங்கோ சாடகே(48) என்பவரின் 12 வயது மகன் ரியோடா என்பவர் அதேபோல் பள்ளி நுழைவுத் தேர்வு எழுதியுள்ளார்.
அவர் அந்த நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததால், அவரது தந்தை ஆத்திரமடைந்து கத்தியால் குத்தியுள்ளார். அதில் ரத்த வெள்ளத்தில் ரியோடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதிக ரத்தம் வெளியானதால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் ரியோடாவின் தந்தையை கைது செய்தனர். அவர் காவல்துறையினரிடம், கொலை குறித்த காரணத்தை விளக்கி கூறியதுடன், தான் தவறுதலாக மகனை கொன்றுவிட்டதாக கூறியுள்ளார்.
பெரிய சிறந்த பள்ளிகளில் தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும், அதுதான் சிறப்பு என்ற கண்மூடித்தனமான பெற்றோர்களின் நம்பிக்கையால் குழந்தைகளின் கனவு பாதிப்படைகிறது.