Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஃபேஸ்புக் நிறுவனம்

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (22:04 IST)
ஃபேஸ்புக் நிறுவன அதிபர்  மார்க் ஜூகர் பெர்க் மீண்டு பல ஆயிரம் ஊழியர்களை பண நீக்கம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

 பொருளாதார மந்தநிலை பணவீக்கம் உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் உலகின் முன்னணி நிறுவனங்களான டுவிட்டர், அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவங்கள்  தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 12 ஆயிரம் ஊழியர்களை பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா வேலை நீக்கம் செய்தது.

இந்த நிலையில், மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஃபேஸ்புக்  நிறுவனம் ஈடுபட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், மீண்டும் 11 ஆயிரம் ஊழியர்களை நீக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஊழியர்கள் தங்களுக்குள்  யாரை பணிநீக்கம் செய்வார்களோ என்று கலக்கத்துடன் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், மெட்டா பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் சுமார் 11 ஆயிரம் பேரை மீண்டும் பணி நீக்கம் செய்ய மார்க் முடிவெடுத்துள்ளார்.

மார்க்கின் மனைவிக்கு 3வது குழந்தை பிறக்க உள்ளதை அடுத்து, அவர் மகப்பேறு விடுப்புக்கு செல்லும் முன் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே 13% ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில்,  இப்போது மீண்டும் ஆட்குறைப்பு செய்தால் இருக்கும் ஊழியர்களுக்கு டுவிட்டர் நிறுவன ஊழியர்களைப்போல் பணியழுத்தம் அதிகரிக்கும் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments