Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஃபேஸ்புக்கின் அலர்ட் சேவையால் பீதியடைந்த தாய்லாந்து

ஃபேஸ்புக்கின் அலர்ட் சேவையால் பீதியடைந்த தாய்லாந்து
, புதன், 28 டிசம்பர் 2016 (17:32 IST)
பாங்காக்கில் குண்டு வெடிப்பு நேரிட்டதாக பொய்யான தகவல் சமூக இணையத்தளத்தில் பரவியதையடுத்து, ஃபேஸ்புக் Safety Check, The Explosion in Bangkok என்று அலெர்ட்டை உருவாக்கப்பட்டு, பரவியது. இதனால் தாய்லாந்து பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


 

 
இயற்கை பேரிடர், குண்டு வெடிப்பு, தீவிரவாத தாக்குதல் போன்ற சமயங்களில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த Safety Check என்னும் அம்சத்தை ஃபேஸ்புக் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியது. 
 
சென்னையில் வர்தா புயல் தாக்கியபோது, இந்த Safety Check Alert அம்சத்தை அனைவரும் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல நேற்று பாங்காக்கில் குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டதாக இணையதளங்களில் பரவியது. இதனால் ஃபேஸ்புக் Safety Check Alert உருவாக்கப்பட்டு பரவியது. 
 
The Explosion in Bangkok என்ற பெயரில் இந்த afety Check Alert பரவியது. இதனால் தாய்லாந்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் மக்கள் குழப்பத்திலும், பயத்திலும் இருந்து வந்தனர். பாதுகாப்புக்காக பயன்படுத்தும் அம்சமே பீதியை கிளப்பியது வேடிக்கையாக இருந்தாலும், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்க ரொம்ப ஸ்ரிக்ட்: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ரூல்ஸ் போடும் சென்னை காவல்!!