Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈழத்தில் வெகுண்டெழுந்த தமிழர்கள்: போராட்டங்கள் ஓயாது மக்கள் முழக்கம்!

ஈழத்தில் வெகுண்டெழுந்த தமிழர்கள்: போராட்டங்கள் ஓயாது மக்கள் முழக்கம்!

ஈழத்தில் வெகுண்டெழுந்த தமிழர்கள்: போராட்டங்கள் ஓயாது மக்கள் முழக்கம்!
, சனி, 24 செப்டம்பர் 2016 (19:25 IST)
இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு பின்னர் மாபெரும் ஜனநாயக ரீதியிலான ஒன்று கூடல் இன்று நடந்துள்ளது. எழுக தமிழ் என்ற பேரணியை மக்கள் முன்னெடுத்து நடத்தியுள்ளனர்.

 
 
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த பேரணியை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். மேலும் இந்த பேரணியில் பெருந்திரளான மக்களுடன், வடமாகண விவசாய அமைச்சர், மீன்பிடி அமைச்சர், சட்டசபை உறுப்பினர்கள், அனைத்து தமிழ் தேசிய கட்சி தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், மதகுருக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
 
இதற்கு ஆதரவு தெரிவித்து வடமாகணத்தின் மற்ற மாவட்ட மக்களும் யாழ்பானத்திற்கு வந்திருந்தனர். இந்த எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு வழங்கி யாழ்ப்பாண வர்த்தக நிலையங்கள் பலவும் மூடப்பட்டிருந்தது.
 
இதில் கலந்து கொண்ட மக்கள் எமது நிலம் எமக்கு வேண்டும், ஆக்கிரமிப்பாளர்களே வெளியேறுங்கள்,ஆக்கிரமிப்பு இராணுவம் எமக்கு வேண்டாம், எங்கள் பண்பாட்டை சீரழிக்காதே, தமிழ் காணிகளை விட்டு இராணுவமே வெளியேறு, ஒற்றையாட்சி தீர்வு ஒருபோதும் வேண்டாம், தென்னிலங்கை மீனவர்களே எங்களது கடலைவிட்டு வெளியேறுங்கள், ராணுவத்தின் ஆக்ரமிப்பு எங்களுக்கு வேண்டாம், சிங்கள புத்த ஆதிக்கத்தை எதிர்க்கிறோம் போன்ற முழக்கங்களை எழுப்பினர்.
 
எங்களின் உரிமைகள் மறுக்கப்படும்வரை எங்களின் போராட்டங்கள் ஓயாது என எழுக தமிழ் பேரணியில் மக்கள் மற்றும் தலைவர்கள் முழங்கி பதாகைகளை ஏந்தியபடி இந்த ஜனநாயக ரீதியிலான எதிர்பு பேரணியை வெற்றிகரமாக நடத்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடரும் இழுப்பறி: ராம்குமார் உடலை வரும் 30ம் தேதி பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு