Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துருக்கியில் நடந்த ராணுவ கலகத்திற்கு அமெரிக்கா ஆதரவா?

Advertiesment
துருக்கியில் நடந்த ராணுவ கலகத்திற்கு அமெரிக்கா ஆதரவா?
, வியாழன், 21 ஜூலை 2016 (00:39 IST)
துருக்கியில் உள்ள அமெரிக்கப் படைத்தளத்தை கலகக்காரர்கள் பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

 
துருக்கியில் ராணுவத்தினரின் ஒரு பிரிவினர் ஜனாதிபதி எர்டோகன் தலைமையிலான அரசுக்குஎதிராகக் கலகம் செய்தனர். இந்தக் கலகத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். கலகம் செய்தவர்களிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசுப்படைகளால் கொலை செய்யப்பட்டனர்.
 
இந்தக் கலகத்திற்குத் தலைமையேற்றவர்களில் ஜெனரல் பெகிர் எர்கான் வான் என்பவர் மிகவும் முக்கியமானவர் ஆவார். இவர் துருக்கியின் தென்பகுதியில் உள்ள இன்சிர்லிக் விமானப்படைத் தளத்தில் முக்கியமான பொறுப்பில் பணியாற்றி வந்தார்.
 
இந்தப் படைத்தளத்தில் அமெரிக்கப் படைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கப் படைகளுக்குத் தெரியாமல் இங்கு எந்த நடவடிக்கையும் இருக்காது என்ற அளவுக்கு முழுக்க, முழுக்க அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில்தான் படைத்தளம் இருந்து வருகிறது.
 
இந்நிலையில், ஜெனரல் பெகிர் எர்கான் வான் தலைமையிலான குழுவினர் அமெரிக்கப் படைகளில் ஒப்புதல் இல்லாமல் செயல்பட்டிருக்க முடியாது என்று துருக்கியின் அரசுத்தரப்பு கருதுகிறது.
 
இத்தனைக்கும் கலகக்காரர்களின் வசமிருந்த போர் விமானங்களில் ஒன்றான எப்-16 ரக விமானம் ஒன்று இந்தத் தளத்திற்கு வந்து எண்ணெய் நிரப்பிக் கொண்டு போயிருக்கிறது. இத்தகைய செயல்பாடுகளை கலகக்காரர்கள் மற்றும் அமெரிக்கப் படையினர் இணைந்துதான் செய்திருக்க வேண்டும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாயாவதிக்காக எனது இதயம் கசிந்து உருகுகிறது - ஜெயலலிதா உருக்கம்