Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐரோப்பாவின் புதிய சட்டம் இந்தியாவை பாதிக்குமா?

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (16:14 IST)
ஐரோப்பிய யூனியனின் பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை என்ற புதிய சட்டம் இந்திய தொழில் நிறுவனங்களுக்கு சில பிரிவுகளில் மறைமுகமாவும், நேரடியாகவும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

 
ஐரோப்பிய யூனியன் தரவின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த சட்டம் ஐரோப்பிய யூனியன் மற்றுமன்றி மற்ற நாடுகளும் பெரிதும் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஐரோப்பிய யூனியன் பொது தரவு பாதுகாப்பு ஒழுக்குமுறை சட்டத்தை கடந்த மே மாதம் 25ஆம் தேதி மூலம் முழு வீச்சில் செயல்படுத்த தொடங்கியுள்ளது.
 
குடிமக்கள் தரவுகளின் பாதுகாப்பு தரம் மற்றும் பலத்தை மேம்படுத்துவதே இந்த பொது தரவு பாதுகாப்பு ஒழுக்குமுறை சட்டத்தின் நோக்கம். இந்த சட்டம் ஐரோப்பிய யூனியன் குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களை சேமிக்கும் பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தும்.
 
ஐரோப்பிய யூனியன் குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களை கையாளும் அனைத்து நிறுவனங்களும் இந்த சட்டம் பொருந்தும்.
 
தனிப்பட்ட தகவல் பொது தரவு பாதுகாப்பு ஒழுக்குமுறையின் இதயத்தில் இருக்கும். தரவு மீறல்களின் அச்சுறுத்தல் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த பொது தரவு பாதுகாப்பு ஒழுக்குமுறை, தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உடனடியான பாதிப்புகளை கண்டறியவும் உதவும். 
 
பொது தரவு பாதுகாப்பு ஒழுக்குமுறையின் நன்மைகள்:
 
சைபர் பாதுகாப்பை அதிகரிக்கும்.
 
சிறந்த தரவு மேலாண்மை.
 
திரும்ப பெறக்கூடிய முதலீடு மீதான வருவாய் அதிகரித்தல்.
 
மேம்படுத்தப்பட்ட ஆடியன்ஸ் லாயல்டி அண்ட் டிரஸ்ட்.
 
இந்த புதிய சட்டம் இந்திய வர்த்தகத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கும். மேலும் இந்திய தொழில்நிறுவனங்களும் தரவு பாதுகாப்பு தேவை ஆரம்பமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments