உலகில் முதன்முறையாக இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்படும் நிலையில் முதல் தடுப்பூசி இந்திய வம்சாவளி முதியவருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் பரவியுள்ள நிலையில் அதற்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை இன்னும் சோதனை அளவிலேயே உள்ள நிலையில் இங்கிலாந்து கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு அளிக்கும் முதல் நாடாக உள்ளது. இந்த தினத்தை இங்கிலாந்தின் தடுப்பூசி தினமாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த தடுப்பூசி முதன்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு போடப்பட்டுள்ளது. நியூகேஸில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 87 வயதான ஹரி சுக்லாவிற்கு இரண்டு டோஸ் பைசர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை போட்டு கொள்வது தனது கடமை என கூறியுள்ள அவர், விரைவில் கொரோனாவிலிருந்து உலகிற்கு விடுதலை கிடைக்கும் என கூறியுள்ளார்.