ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் தப்பி சென்ற அதிபர் அஷ்ரப் கனி பல மில்லியன் டாலரை சுருட்டி சென்றதாக அந்நாட்டு தூதுவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தனது குடும்பத்தினருடன் ஆப்கானிஸ்தானை விட்டு தப்பி சென்றார். இந்நிலையில் அவர் தற்போது அரபு அமீரகத்தின் பாதுகாப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக அஷ்ரப் கனி பல மில்லியன் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டதாக வெளியான குற்றச்சாட்டுக்கு அஷ்ரப் கனி மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தஜிகிஸ்தான் நாட்டிற்கான ஆப்கன் தூதர் ஒருவர் அஷ்ரப் கனி தப்பி சென்றபோது 169 மில்லியன் அமெரிக்க டாலர்களை எடுத்து சென்றதாக தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச போலீஸ் அஷ்ரப் கனியை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.