ட்விட்டர் நிறுவனத்தை கடந்த ஆண்டு 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய பிரபல தொழிலதிபதிபர் எலான் மஸ்க், அந்த நிறுவனத்தை விற்க உள்ளதாக கூறப்படுகிறது.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மாஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார் என்பதும் ஆட்குறைப்பு, ப்ளூடிக் போன்ற நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது குறித்தும் அதை நிர்வாகம் செய்வது குறித்து பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக சமீபத்தில் பிபிசி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
ட்விட்டரை சொந்தமாக வைத்திருப்பது எனக்கு வேதனையாக இருப்பதாகவும் அதை நிர்வாகம் செய்வது மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும் ட்விட்டரை வாங்கியது சரியான முடிவு தான் என்றாலும் தனக்கு மிகவும் அழுத்தமாக இருப்பதாக இருப்பதாக கூறினார்.
மேலும் பணிச்சுமையை தனக்கு ஏற்கனவே அதிகமாக இருப்பதால் ட்விட்டர் நிறுவனத்தையும் சேர்த்து என்னால் நடத்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் விரைவில் ட்விட்டர் நிறுவனத்தை விற்பனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.