உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தான் நண்பர்களின் இடங்களில்தான் தங்கி வருவதாகக் கூறியுள்ளார்.
டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவற்றின் நிறுவனர் எலான் மஸ்க். உலக கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க் சமீபத்தில் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் 9 சதவீத பங்குகளை வாங்கினார். இதை தொடர்ந்து ட்விட்டர் நிர்வாக குழுவில் அவரை இடம்பெற அழைத்ததற்கு அவர் அதை மறுத்துவிட்டது பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது எலான் மஸ்க் ட்விட்டரையே மொத்தமாக வாங்க பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக அவர் ட்விட்டரில் வாங்கிய 9 சதவீத பங்குகளே 3 பில்லியன் டாலர் பெருமானம் கொண்டது. எலான் மஸ்க்கின் இந்த செயல் கார்ப்பரேட் நிறுவனங்களையே வாய் பிளக்க செய்துள்ளது.
சமீபத்தில் போர்ப்ஸ் பத்திரிக்கை இவரை உலகின் நம்பர் 1 பணக்காரர் என அறிவித்தது. அது சம்மந்தமாக அவர் அறிவித்த நேர்காணலில் ”எனக்கென்று சொந்தமாக இடம் கூட கிடையாது. நான் எனது நண்பர்களின் வீடுகளில் இருக்கும் எக்ஸ்டரா பெட் ரூம்களில் தங்கிக் கொண்டு இருக்கிறேன்” எனக் கூறி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார்.