ட்விட்டர் பயனாளர்களுக்கு ஆப்பு வைத்த எலான் மஸ்க்..! ப்ளூ டிக் பயனாளிகளுக்கு மட்டுமே எல்லாம்..!

Webdunia
ஞாயிறு, 2 ஜூலை 2023 (07:21 IST)
இனி ப்ளூ டிக் சந்தாதாரர்கள் மட்டுமே ட்விட்டரை முழுவதுமாக பயன்படுத்த முடியும் என்றும், அதற்கேற்ப புதிய கட்டுப்பாடுகளை எலான் மஸ்க் விதித்திருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
 
அதாவது ட்விட்டரில் உள்ள ப்ளூ டிக் சந்தாதாரர்கள் ஒரு நாளைக்கு 6000 பதிவுகளைப் படிக்க முடியும். ட்விட்டரில் இருக்கும் மற்ற பயனாளர்கள் வெறும் 600 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும்.‌ புதிதாக ட்விட்டருக்கு வரும் unverified பயனாளர்கள் இனி ஒரு நாளைக்கு 300 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என்ற புதிய நிபந்தனையை எலான் மஸ்க் விதித்திருக்கிறார்.
 
ஆனால் இது ஒரு தற்காலிக முடிவு என எலான் மஸ்க் அறிவித்திருந்த நிலையில்  கடந்த சில மணி நேரமாக ட்விட்டர் பயன்படுத்துவதில் சிரமம் இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  எலான் மஸ்க் எடுத்துள்ள இந்த முடிவுக்கு டுவிட்டர் பயனர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments