கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக அமெரிக்காவில் 6 வயது சிறுவனை முதியவர் ஒருவர் கொடூரமாக குத்திக் கொன்ற வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ நகரில் வசித்து வந்தவர் 73 வயதான ஜோசப். இவரது வீட்டின் ஒரு பகுதியில் பாலஸ்தீனத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளது. அவர்கள் மீது ஆரம்பம் முதலே ஜோசப் இன வெறுப்புக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
கடந்த 2023ம் ஆண்டு அந்த வீட்டை சேர்ந்த 6 வயது சிறுவன் அல்பயோமி வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அவனை ஜோசப் கத்தியால் 26 முறை குத்தி கொடூடமாகக் கொன்றார். இதை தடுக்க சென்ற சிறுவனின் தாயும் தாக்குதலுக்கு உள்ளானார். இதில் சிறுவன் பரிதாபமாய் பலியான நிலையில் முதியவர் ஜோசப் கைது செய்யப்பட்டார்.
உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. இல்லினாய்ஸ் நீதிமன்ற உத்தரவின்படி, அவருக்கு 53 ஆண்டுகள் ஆயுள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K